கோவை செழியன் அவர்களால் துவங்கப்பட்ட மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்கு வேளாளர்களுக்காக வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.


சங்கத்தின் நோக்கங்கள்

  • ~ சமுதாய மக்களின் பாதுகப்பு, ஒற்றுமை மொத்த சமுதாயத்தின் நலன் காக்க பாடுபடுவது.

  • ~ இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு கிராம ராஜ்யம் அமைய பாடுபடுவது.

  • ~ கிராமத்தின் அனைத்து வர்க்கத்திற்கும் பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்கச் பாடுபடுவது.

  • ~ சுரண்டல் , லஞ்சம், ஊழல் ஆதிக்கமற்ற தூய்மையான அரசு அமைய ஜனநாயக முறையில் பாடுபடுவது

  • ~ கிராமத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல் சமூக பொருளாதார, மருத்துவ, கல்வி, கலாச்சார, தொழில்,வேலைவாய்ப்புத் துறையில் சம உரிமை பெற்று மேம்பாடடைய பாடுபடுவது.

  • ~ சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற சந்தா, நன்கொடை மற்றும் இதர வகையில் சங்கத்திற்கு பொருளீட்டுதல்.

  • ~ சங்கத்திற்க்கு தேவையான கட்டிடம் கட்டுதல், வாடகைக்கு எடுத்தல், வாடகைக்கு விடுதல், மற்றும் இது போன்ற இன்னும் பலவற்றை செய்தல்.



மேலான்மை

  • ~ சங்கத்தின் காரியங்கள் குறித்து கட்டளையிட அதிகாரம் பெற்ற நபர் சங்கத்தலைவர் ஆவார். தலைவரின் ஆலோசனைப்படி சங்கத்திற்கு வரும் கடித போக்குவரத்துக்களையும் இதர நிர்வாக நடவடிக்கைகளும் பொதுச் செயலாளர் மேற்கொண்டு செயல்படுவார்.

  • ~ தலைமை சங்கத்தின் அன்றாட அலுவலர்களை நிறைவேற்றவும், சங்கத்தின் எல்லா அமைப்புகளுடனும், தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் ஒன்று கோவையில் இருக்கும்.



சங்கத்தின் உறுப்பினர்கள்

  • ~ சங்கத்தின் குறிகோளை ஏற்று சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க உறுதி தரும் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் உறுப்பினராகலாம்.

  • ~ தலைமை செயற்குழுவிற்காக பொதுச் செயலாளரின் அனுமதி பெற்றவுடன் மேற்படி விண்ணப்பதாரரை சங்கத்தின் ஆண்டு சந்தா தொகை ரூ.500/- செலுத்தி உறுப்பினராகலாம்.

  • ~ விண்ணப்பத்தினை ஏற்றுகொள்ளவோ, நிராகரிக்கவோ, தலைமை செயற்குழுவிற்கு முழு உரிமையுண்டு.

  • ~ ஒவ்வொரு உறுப்பினருக்கும் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட அடையாள அட்டை தலைமை நிலையத்திலிருந்து வழங்கப்படும்.